இரவை சுடும் வெளிச்சம் ஒரு மீள் பார்வை
பிரியமுள்ள வாசகர்களே , இரவை சுடும் வெளிச்சம் மொத்தம் இரண்டு பாகங்கள் வெளியாகி இருக்கிறது நாவலை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ராம், தீபு இருவரும் ரஞ்சித் , தீப்தி இருவருக்காக துப்பறியும் நாவல். பல்வேறு குற்றங்கள் அதன் பின்னணிகள். பொதுவான குற்றங்கள், குற்றங்களை மறைப்பதற்காக செய்யபபடும் மேலதிகமான குற்றங்கள். இதில் புதுமை என்று எதுவும் இல்லை ஆனால் சமூகத்தில் ஊடுருவி இருக்கும் மேம்போக்கான சிந்தனைகள் போன்றவற்றை இரவை சுடும் வெளிச்சம் சுட்டிக்காட்டுகிறது. வெளிச்சம் ரொம்ப குறைவுதான் என்றாலும் அதன் விளைவுகள் குற்றங்கள் நடக்காமல் இருக்க உதவுகிறது. நாவலின் இரண்டாம் பாகம் வேறு விதமானது. இதில் ஒரே கதையோட்டம் ஆனால் ஜானு என்கிற பெண் போலீஸ் தன்னை சூழ்ந்துள்ள குற்ற நிகழ்வுகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாள். முற்போக்கு சிந்தனைகள் அதிகம் சொல்லப்படாவிட்டாலும் அவளுடைய தங்கையை ஜானு ஐ பி எஸ் படிக்க வைக்கிறாள். இதிலும் ராம், தீபு வருகிறார்கள். அவர்கள் தீவீரமாக இதில...








