நிழல் தரும் வசந்தம் -சில நினைவுகள்

 


நிழல் தரும் வசந்தம் பிரதிலிபி மற்றும் Matrubharti இணைய பக்கங்களில் வெளியானது. நான் எதையும் திட்டமிடவில்லை. பிரேம் கதையின் நாயகன் என்பது மட்டுமே உறுதியாகி இருந்தது. இது சினிமா அல்லவே. தொடர்ச்சியாக எழுதும் போது அந்த கதாபாத்திரங்களுக்குள் ஒரு ஒற்றுமை தெரிந்தது. ஏதோ ஒரு காரணத்தால் சூழ்நிலையால் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள். அன்பு, பாசம், எளிமை , விடாமுயற்சி இவைகளை வெளிப்படுத்தியது நிழல் தரும் வசந்தம். 6 மாதங்கள் கழித்தும் அதன் எண்ண ஓட்டத்தில் இருந்து விலக முடியவில்லை. காரணம் அதன் இறுதிப்பகுதி. எல்லாவற்றையும் உதற நினைக்கும் பிரேமுக்கு தன் மகன் மேல் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கு கடிதம் எழுதுகிறான். நேரில் போய் பார்க்கும் போது முற்றிலும் தன்னை மறக்கிறான். தான் பட்ட கஷ்டங்கள் யாவும் கரைந்து போகிறது. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவானது ஜீவ நதி போன்றது. ஒரு வேளை தந்தை மகனுக்கு இடையே ஆயிரம் இடைவெளி இருந்தாலும் கூட அந்த அப்பா என்ற சொல் எல்லா இடைவெளியையும் விலக்க கூடியது. நிழல் தரும் வசந்தம் வெளியானபோது ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் நன்றி. இப்போதும் சிலர் பிரதிலிபியில் வாசித்து வருகிறார்கள். இந்த பக்கத்திலும் அதன் இணைப்பு இருக்கிறது.  நிறைய எழுதவே நினைக்கிறேன். 


என்றும் அன்புடன் 

kattupaya s 


 

 


 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்