எதிர்பால் மயக்கம் சில குறிப்புகள்

 


எதிர்பால் மயக்கம் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது பல நினைவுகள் அலையடிக்கின்றன. ஒருதலை காதல் என் கல்லூரி படிப்பை ரொம்பவும் பாதித்தது. இது கல்லூரி பருவத்தில் நடந்தது என்றாலும் இன்றும் சில பேர் அந்த காதலை மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெறும் ஈர்ப்பு மட்டுமே காதலாகி விடாது என்பது புரிய எனக்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல . நான் காதலை எதிர்ப்பவன் அல்ல. ஆனால் ஆழமில்லாத அன்பு அதன் திசையற்ற பயணம் ஆபத்தானது. நல்ல விஷயங்களை பேசும் போது காதல் குறுக்கிட்டால் அதை தவிர்ப்பவர்கள் இன்னமும் உள்ளனர். இன்னும் சலனம் ஏற்படுத்தும் பாடு பல குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.சற்றே நிதானத்துடன் காதலை அணுக தயாராய் இருக்க வேண்டும். சொல்ல கூடாத விஷயமில்லை காதல். ஒருதலை காதல் சில சமயங்களில் வன்முறையில் முடிவதை நாம் பார்க்கிறோம். நிகழ்வு அதன் விளைவுகள் பற்றி சிந்திக்காத காதல் தற்காலிக வெற்றி பெறலாம். அது எப்போதுமே எதிர்வினைகள் சூழ இருக்கும் என்பதை நாம் உணர முடியும். காதலை வெளிப்படுத்துவோம் சரியான சூழலில் . 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்