உருவம் - ஒரு அசலான பேய் படம்

uruvam Wikipedia  


பிரியமுள்ள வாசகர்களே ,


உருவம் படம் பற்றி நிறையவே சின்ன வயதில் பார்த்திருப்போம். அதில் பேயாக மாறும் நடிகர் மோகனும் நன்றாகவே நடித்திருப்பார். நாம் அந்த படத்தின் டெக்னிகல் உத்திகள் பல படங்களுக்கு முன்னோடிகளாக இருப்பதை அப்போது உணர்ந்திருக்கவில்லை. படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. GM குமார் இயக்கி இருந்தார். RP விஸ்வம் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். நடிகர் மோகனின் பேய் மேக் அப் சிறப்பாக இருந்தது. பயமில்லாமல் பேயை ரசிக்க முடியாது. பிள்ளையார் சிலை முன் மோகன் கை நீட்டி தான் பேயா இல்லையா என்பதை கண்டறியும் காட்சி இப்போதும் என்  கண் முன் வந்து போகிறது. யுட்யூப் மூலம் இந்த படத்தை இலவசமாக பார்க்கலாம். எத்தனையோ குப்பை படங்களை மறு ரிலீஸ் செய்கிறார்கள் . இந்த படத்தையும் செய்யலாம். மிகுந்த சிரமப்பட்டுத்தான் படம் எடுத்திருக்கிறார்கள். உருவம் பேய் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்