பாசில் படங்கள்
பிரியமுள்ள வாசகர்களே,
பாசில் மலையாள பட இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழிலும் அவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அரங்கேற்றவேளை(1990) எனும் பிரபு மற்றும் ரேவதி நடித்த நான் சிறு வயதில் பார்த்த அவரது படம். பிறகு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988). பிறகு காதலுக்கு மரியாதை ,கற்பூர முல்லை ,பூவே பூச்சூடவா ,வருஷம் பதினாறு ,கிளிப்பேச்சு கேட்கவா போன்ற படங்களை பார்த்தேன். இதில் கால வரிசை மாறியிருக்கலாம். பாசில் படங்களில் என்னை கவர்ந்தவை பாடல்கள். அதில் குறிப்பாக அதிக ஆடம்பரமில்லாத ஒளிப்பதிவு . பெரும்பாலும் இளையராஜாதான் அவர் படங்களுக்கு பின்னணி இசை. அவருடைய திரைகதையின் தெளிவுதான் அவரது வெற்றிக்கு காரணம். பின்னாளில் அவர் இயக்கிய கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தன.
நான் அவரது மலையாள படங்களான Manichitrathazhu , Ente Mamattikkuttiyammakku, Nokkethadhoorathu Kannum Nattu, Aniyathipravu போன்ற படங்களை பார்த்திருந்தேன் . பெரும்பாலும் குடும்ப படங்களாகவும் வெகுஜனங்களை கவரும் வகையில் அவரின் படங்கள் இருந்தன. தமிழில் சந்திரமுகி என்று அவரது படம் பல வகையிலும் தொடர்பில்லாதவாறு எடுக்கப்பட்டது.காதலுக்கு மரியாதை விஜய் அவர்களுக்கு பெரிய திருப்பு முனையாகஅமைந்தது. பூவே பூச்சூடவா படம் எல்லோரையும் கவர்ந்தது. அதன் ஒரிஜினல் மலையாளப்படம் மோகன்லால் நடித்திருப்பார். இங்கு தமிழில் எஸ் வி சேகர் நடித்திருப்பார். கதைக்களம்தான் பாசிலின் பலம். அவர் இப்போதெல்லாம் படம் இயக்குவதில்லை என்பது சோகமே. அவரது வருஷம் 16 படம் ஒரிஜினல் மலையாளப்படம் பார்த்தவர்களுக்கு அவர் எவ்வளவு எளிமையாக திரைக்கதையை நேர்த்தியாக ப்ரெசெண்ட் பண்ண கூடியவர் என்பதும் புரியும். நேரமிருந்தால் அவரது பழைய படங்களை பாருங்கள்.
என்றும் அன்புடன்
kattupaya s



கருத்துகள்
கருத்துரையிடுக