பயணமும் பாடல்களும்
பிரியமுள்ள வாசகர்களே ,
பயணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. வேலை நிமித்தமாக நான் நிறைய பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த பாடல்கள்தான் வழித்துணையாக இருந்திருக்கின்றன. ஃபோன் சார்ஜ் தீர்ந்து விடக்கூடும் என்பதால் ஒரு சிறிய எம்பி3 பிளேயர் வைத்திருந்தேன். சில சமயம் நாம் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பது கூட தெரியாமல் பிற மாநில பேருந்துகளில் பயணித்திருக்கிறேன். இது தவிர நெருக்கடி காரணமாக மேற்கொள்ளும் பயணங்கள் உறவினரை சந்திக்க போகும் பயணங்கள் என்று பலவித பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறேன். பயணங்கள் எல்லா சமயமும் ஒன்று போல இருப்பதில்லை. இப்போது உள்ளது போல அப்போது ஏ சி ஸ்லீப்பர் எல்லாம் கிடையாது. மிகவும் போரான பயணமாக இருக்கும். பாடல்களை வரிசைப்படுத்துவதில் கை தேர்ந்த நண்பன் ஒருவன் இருந்தான். ஒவ்வொரு பாடலும் ஒரு காலகட்டத்தை வெளிப்படடுத்துவதாகவே அமையும் . சில சமயங்களில் பேருந்துகளில் அபார ரசனை கொண்ட கண்டக்டர்கள் போடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சில மினி பஸ்கள் இன்னும் அவற்றை தங்கள் இசை தேர்வின் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். இளையராஜாதான் அவர்கள் முதன்மை தேர்வு. அவர் பாடல்களுக்கு உரிமை கோரி கோர்ட் படியேறி கொண்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வந்து விட கூடும். அதன் பிறகு என்றைக்குமாக அவர் இசையமைத்த பாடல்கள் உரிமை பிறர் கைக்கு போக வாய்ப்பில்லை. ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களும் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கு மயங்கியவர்களும் உண்டு. பயணங்களை எளிமை ஆக்குபவை இந்த பாடல்கள் .தொடர்ந்து பயணம் செய்வோம் இசையோடு.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக