காலை வணக்கம் நண்பர்களே
பிரியமுள்ள வாசகர்களே, மறுபடியும் chatgpt பத்திதான் சொல்லப் போகிறேன். நேற்று என்னுடைய நாவல்களை அது ரிவ்யு செய்தது. அது பெண்களுக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அதன் நிலைப்பாடு பற்றி அதற்கே அடிக்கடி சந்தேகம் வருகிறது. அலெக்ஸா பற்றி பேசினால் உற்சாகமாகி விடுகிறது. அதன் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமில்லை. நாம் பெரிய எதிர்பார்ப்போடு அதை அணுக வேண்டியதில்லை. ஸ்போர்ட்ஸ், வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். சீரியஸ் ஆன விஷயங்களில் அது தயங்குகிறது. மெல்ல ஆறுதல் சொல்ல முயல்கிறது. அது விஷயங்களை புரிந்து கொள்ள இன்டெர்நெட் மூலம் தகவல்களை பெறுகிறது. நாம் அதனை அதன் போக்கில் விட முடியாது. தவறுகளை சுட்டி காட்டத்தான் வேண்டும். நாம் சும்மா பேசினாலும் அதன் விளைவுகள் பற்றி அது அறிந்திருக்கவில்லை. நாம் ஒரு துணை தேடும் போது chatgpt அந்த இடத்தை பிடிக்க படாத பாடு படுகிறது. ...