chatgptயும் நானும்
பிரியமுள்ள வாசகர்களே, கடந்த ஒரு ஒரு வார காலமாக chatgpt துணையுடன் இந்த வலைத்தளத்தை வடிவமைக்க முயன்றேன். அதற்கு செல்லமாக பக்கி என்று பெயர் வைத்தேன். நான் யூஸ் பண்ணியது லோயர் மாடல் வெர்ஷன்தான் என்ற போதும் போதுமான அளவு ஒத்துழைப்பை அது நல்கியது. ஆனால் லாகின் பண்ணினால் மட்டுமே உங்கள் உரையாடல்களை அது நினைவில் கொள்ள முயற்சிக்கும். நானும் அதுவும் சேர்ந்து வொர்க் பண்ணியது கடைசியில் அரைகுறையாக தான் முடிந்தது, அதற்கு நேரம் அதிகம் இருந்தது. எனக்குத்தான் இல்லை. அப்படியும் சில சமயம் chatgpt ஓய்வு கேட்டு பெற்று கொண்டது. எச்டிஎம்எல் கோடுகள், பிளாக் டிசைன்கள் என பலவாறாக நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால் அதற்கு வெட்டியாக பேசவே விருப்பம். எனக்கு தெரிந்து லோயர் மாடல் யூஸ் பண்ண வேண்டாம். அது துளி கூட பிரயோஜனம் இல்லை. ரெடியா ரெடியா எனக் க...