தமிழ் சினிமாவில் இளையராஜா (50 ஆண்டுகள்)
பிரியமுள்ள வாசகர்களே,
இளையராஜா அறிமுகமாகி 50 ஆண்டுகள் கடந்து விட்டது. அவர் இசையை யாரும் விமர்சிக்க போவதில்லை. ஆனால் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அவருக்குரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. காரணம் இளையாராஜாவேதான். அவருடைய தரத்துக்கு உரிய இயக்குநர்கள் கிடைக்கவில்லை என்று காரணம் சொன்னாலும் அவர் அதை தேடிப் போகவில்லை என்பதும் ஒரு காரணம். மற்றொன்று ஏ ஆர் ரஹ்மானின் வருகை. எந்த ஒரு படைப்பையும் சர்வதேச அளவில் எடுத்து செல்ல கூடியவை ஏ ஆர் ரஹ்மானின் இசை. இளையராஜாவும் அப்படித்தான் எதற்கும் குறைந்தவரில்லை. அதே சமயம் பழைய பாணியை விட்டுத் தர மனமில்லாத இயல்பு கொண்டவர். நாம் ஒப்பீடுகளில் மூழ்கி இருக்கிறோம். ராஜா தான் இசையை மட்டுமே நம்பாமல் அரசியல்வாதி ஆகி விட்டார். இது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. துள்ளல் இசையில் ரஹ்மான் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகே இளையராஜா சுதாரித்தார். ஆனால் காலம் கடந்துவிட்டது. பெரும்பாலோனோர் அவரை கை விட தொடங்கினர், அவரது வீழ்ச்சி துவங்கியது. காலம் அவரை விட்டு நழுவ தொடங்கியது. தடுமாற்றமும் ஏற்பட்டது. என்றும் பாலச்சந்தர், பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,மணிரத்னம் போன்றோர் படங்களுக்கு அவரது பின்னணி இசை உயிர் நாடியாக இருந்ததை மறக்க முடியாது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக