நாவல்களின் தரம் :மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியது




பிரியமுள்ள வாசகர்களே ,

                                                      நாவல் வாசிப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. அது குறித்த பரவலான பார்வைகளும், நடைமுறை கண்ணோட்டங்களும் முக்கியமானது. சில மனதை விட்டு நீங்கா படைப்புகளை தமிழ் இலக்கியம் தொடர்ந்து வழங்கி வருகிறது. முறையே தமிழ் எழுத்தாளர்கள் அதற்குரிய பங்களிப்பை காலந்தோறும் செய்து வருகின்றனர். காதல் கதைகள்,குடும்ப கதைகள், திரில்லர் கதைகள், சில முரணான காதல் மலரும் கதைகள் போன்றவை எல்லா காலத்திலும் வெளியாகியிருக்கின்றன. அதே சமயம் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் படைப்புகள் வந்திருக்கிறதா என்றால் அத்தனை எளிதில் பதில் கிடைக்காது, இன்னும் ஜெயமோகன் போன்றவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர் என்ன எழுதினாலும் விவாதப் பொருளாகிறது. அவர் அளவுக்கு நாலேட்ஜ் உள்ள எழுத்தாளர்கள் இல்லையென்று நம்பும் அளவுக்கு அவர் அடித்துப் பேசுகிறார். இது ஒரு புறம் மறுபுறம் எஸ் . ராமகிருஷ்ணன் போன்றோர் வெளிநாட்டு மொழிபெயர்ப்பு நாவல்கள் பற்றி சிலாகிக்கிறார்கள். அவர்கள் உலக சினிமா பற்றிய பரந்த பார்வை கொண்டிருக்கிறார்கள் அதோடு உலக இலக்கியம், பேஷன் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாம் எழுத வேண்டிய அவசியம்  நமக்கு நிறைய இருக்கிறது. தேவைகளுக்கு எழுதும் நூல்களே நமக்கு படிக்க கிடைக்கின்றன, உண்மையான இலக்கியம் வெகு தொலைவில் உள்ளது, சமூகத்தில் விரும்பப்படும் சில விஷயங்களையே நாம் கதையாக, நாவலாக சொல்லி வருகிறோம். புதிய எழுத்தாளர்கள் வரவு நிறைய இருக்கிறது.. புத்தக வெளியீட்டு  முயற்சியும் இருக்கிரது ஆனால வரவேற்பு இல்லை.   

இனி நாம் செய்ய வேண்டியது. இளம்  எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளை மேம்படுத்த நம் ரசனைத் தேர்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். இது எளிதான செயலா என்றால் நிச்சயம் முடியும். நேரம் ஒதுக்கி அவற்றை படிக்க முயல வேண்டும். சும்மா நாவலின் தரம் உயர்ந்து விடாது. நாம் உழைக்க வேண்டும். நாமே எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் காலத்தை கடந்து நிற்கும் அளவுக்கு நாம் புத்தக மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். பொழுது போக்கு ஊடகங்களை குறை சொல்லி பயனில்லை. நாம் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். என்னால் முடிந்த எழுத்து பற்றிய சிந்தனையை நான் இங்கு பதிகிறேன். இனி உங்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது. ரொம்ப எழுதினால் இருக்கிற பார்வையாளர்களும் போய்விடுவார்கள் என்பதால் இத்தோடு முடித்து கொள்கிறேன் 

என்றும் அன்புடன் 

kattupaya s

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்