எதை நோக்கி போகிறது தமிழ் சினிமா?
பிரியமுள்ள வாசகர்களே ,
ரசிகர்கள் பலவிதம். இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் நல்ல தரத்தில் எடுத்தால் ஒழிய எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியாது. கதை ஒரு பொருட்டே அல்ல தமிழ் சினிமாவுக்கு. ஹீரோ வருகை , மசாலா பாட்டு ஸீன், மாஸ் ஸீன், கொஞ்சம் சென்ட்டிமென்ட் ஸீன் கொஞ்சம் , கிளைமாக்ஸ் ,இவ்வளவையும் சேரத்தெடுத்தால் தமிழ் சினிமா. ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றிருக்கிறது. நமக்கும் அதன் தாக்கத்துக்கும் சம்பந்தமில்லை. எல்லா வசதிகளோடு தரம் குறைந்த படங்களையே தமிழ் சினிமா எடுத்து வருவது வருத்தத்திற்கு உரியது. 200 கோடி ,300 கோடி வசூல் செய்யும் படங்கள் வன்முறையை தூண்டுபவையாக இருக்கின்றன. இப்போது 1000 கோடி இலக்கு வைத்து படங்கள் தயாரிக்கப் படுகின்றன. நமக்கு தேவையென்ன? சினிமாவை நீங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டாம். அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இருக்கிற சினிமாவையும் கெடுக்க வேண்டாம் என்பதே அனைவரின் வேண்டுகோள். ஷங்கர் இப்போதுதான் இந்தியன் 2 படம் பாடம் கற்றுக்கொண்டார். மணிரத்னம் காட்பாதர் படம் மூலமும் , லோகேஷ் கனகராஜ் கூலி படம் மூலமும் கற்று கொண்டனர். வன்முறை எந்த காலத்திலும் முழுக்க வியாபாரம் ஆகாது. நல்ல கதைகளில் எடுக்கப்பட்ட சில தமிழ் படங்கள் உண்டு. ஆனால் வியாபாரமே பிரதானமாய் இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்பட போவதில்லை.
என்றும் அன்புடன்
kattupaya s
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)


கருத்துகள்
கருத்துரையிடுக