எதிர்பால் மயக்கம் நாவல் சில நினைவுகள்
பிரியமுள்ள வாசகர்களே ,
எதிர்பால் மயக்கம் நாவல் 11 பகுதிகள் பிரதிலிபியில் வெளியாகியுள்ளது. இப்போது அதன் கதாபாத்திரங்கள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நாம் விரும்புகிற அல்லது விரும்பிய பெண்ணை விட்டுவிட்டு இன்னொருவருடன் திருமணம் என்பது இப்போதெல்லாம் சர்வ சாதரணமாகி விட்டது. எதிர்பாரா திருமணங்கள் என்பது இந்த சமூகத்தின் அங்கமாகிவிட்டது. 96 படத்தில் சொல்வது போல நான் உன் கல்யாணத்துக்கு வந்திருந்தேன் ஜானு என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது. தவிப்புக்கு உள்ளாகி தவிக்கும் நெஞ்சங்கள் ஆறுதல் பெறவே இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். ஒரு பெண்ணின் நினைவு என்னவெல்லாம் செய்யும் என எல்லோருக்கும் தெரியும். அதன் பின்விளைவுகள் பற்றி அறியாத வயதில் தோன்றும் உணர்வு இறுதிவரை வரும். நான் அதை ஆண்கள் மட்டுமே அறிந்த மொழியில் சொல்லியிருக்கிறேன். ஒருபுறம் திருமணம், மறுபுறம் தான் ஒருதலையாய் காதலித்த பெண்ணே நமக்கு கல்யாணம் செய்து வைக்கிற கையறு நிலை யாருக்கும் வரக்கூடாது. நான் எழுத நினைத்ததெல்லாம் எழுத முடியவில்லை.நிஜத்தில் தோல்வி கதையில் வெற்றி என்பதெல்லாம் கற்பனையில்தான் சாத்தியம். நான் ஒரு கதையை உருவாக்கி அதில் சந்தோஷப் பட்டு கொண்டிருக்கிறேன். அவன் எடுக்கும் இறுதி முடிவில் தான் அந்த இரு பெண்களின் எதிர்காலமும் இருக்கிறது. காத்திருங்கள் நானும் காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்
kattupaya s

கருத்துகள்
கருத்துரையிடுக