அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன் குறுநாவல்

 பிரியமுள்ள வாசகர்களே ,




அசோகமித்திரனின் இந்த படைப்பானது ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இன்ஸ்பெக்டர்   செண்பகராமன் என்கிறவருக்கும் இடையேயான நட்பு குறித்த குறுநாவலாகும்.எதிர்பாராத விதமாக அவர் இறக்கும் தருவாயில் அவரது காதலியிடம் கொஞ்சம் பணம் கொடுக்க சொல்லி கொடுத்தனுப்புகிறார். இவனும் முயற்சிகள் செய்து கொடுத்து விடுகிறான். அவர் இவன் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறார், சந்திரசேகரன் அவனது பெயர். இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், அவரது ஜீப் போன்ற வண்டி போன்றவை அழகாக சொல்லப்பட்டு இருக்கும். சந்திரசேகரனை குடும்பத்தோடு சினிமாவுக்கு அழைத்து போவார் இன்ஸ்பெக்டர் செண்பகராமன். இன்னும் ஏராளமான ஸ்வாரசியமான தகவல்கள் இந்த குறுநாவல் வழி சொல்லப்பட்டு இருக்கும். அசோகமித்திரன் பிறந்த ஊர் செகந்தராபாத்  . அவர் ஆங்கிலமும் சரளமாக எழுதி பேசக்கூடியவர். பள்ளிக்கல்வி குறித்த பல தகவல்கள் அவரால் நகைச்சுவையுடன் நாவல்களில் பகிரப்பட்டுள்ளது. 

என்றும் அன்புடன் 

kattupaya s


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்