தேடுதலும் நாவல் வாசித்தலும்





பிரியமுள்ள வாசகர்களே ,

நாவல் வாசிப்பு நல்ல முறையில் தொடங்க சில அடிப்படை நூல்களை வாசிப்பது அவசியம். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜே ஜே சில குறிப்புகள், அசோகமித்திரனின் தண்ணீர் ஆகியவைதான் எனக்கு முதன் முதலில் நாவல் வாசிப்பில் ஈடுபாடு வர காரணம். சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் ,சுஜாதா போன்றோரை நான் வாசிக்க தொடங்கியிருந்தாலும் சுந்தர ராமசாமியும்,அசோகமித்திரனும் தன்னுடைய சூழலில் எவ்வாறு நாவலின் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும் என்பதை காட்டியிருப்பார்கள். நான் நாவல் வாசிப்பை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன் . ஒரு வேளை நீங்கள் எங்கிருந்து துவங்க விரும்புகிறீர்கள் என்று குழப்பத்தில் இருந்தால் இந்த புத்தகங்கள் சீரான நிதானமான பாதையை காட்டும்.  அறிமுகம் மட்டுமே நான் செய்கிறேன் அவர்களை விமர்சிக்கவோ , நூல் அறிமுகம் செய்யவோ நான் இன்னும் பக்குவப்படவில்லை. நீங்கள் இதை முயற்சித்து பாருங்கள். ஆரம்பத்தில் ஒரு பிடிமானமும் கிட்டாது. ஆனால் போக போக மறுவாசிப்பிற்கு பிறகு தெளிந்த நீரோடை போல இந்த வாழ்க்கை எத்தனை சூட்சுமமானது என்பதை அவர்கள் சொல்லியிருப்பார்கள் . 

என்றும் அன்புடன் 

kattupaya s











 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்