நாவல் எழுதுவது எப்படி ?
பிரியமுள்ள வாசகர்களே ,
இந்த தலைப்பில் எழுதிய காரணம் எனக்கே இன்னும் இதை பற்றிய முழுமையான பார்வை இல்லை. ஆனாலும் நான் எப்படி எழுதுகிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். நாவலின் முடிவை முன் கூட்டியே தீர்மானித்து எழுதுவது நல்லதல்ல. துவக்கம் நன்றாய் இருக்க வேண்டும். நாம் யாரை பற்றி எழுத போகிறோமோ அல்லது எதை பற்றி எழுத போகிறோமோ அது பற்றிய தெளிவான எண்ணம் இருக்க வேண்டும். எழுத ஆரம்பித்தவுடன் நமக்கு சந்தேகங்கள் வரும். அவற்றுக்கான விடை கிடைக்கும் தொடர்ந்து எழுதினால் . முடிவு குறித்து அவசரப்பட வேண்டாம். முடிவே இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். முதல் பகுதிக்கும் இடைப்பகுதிக்கும் அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. எழுதும் போது சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும். அது நல்லதுதான். வெறும் பக்கம் நிரப்ப நினைத்தால் அது சரியாக வராது. முந்தைய நாவலின் தாக்கமோ பிற நாவல்களின் தாக்கமோ இல்லாமல் இருப்பது நல்லது. என்னுடைய முதல் நாவல் வடிவத்தில் பல சிக்கல்கள் இருந்தன. முடிக்கும் போது அதன் ஆரம்பத்துக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை. பகுதி பகுதியாக எழுதுவது நல்லது. நல்ல எண்ணங்களாய் எழுதுகிறேன் என்று எந்தவித எல்லைகளும் இல்லாமல் கதை பண்ணுவது ரிஸ்க். ஆக நிதானமாய் எழுதுங்கள் கற்பனையை கொஞ்சமாய் கலந்து எழுதுங்கள். ஆல் தி பெஸ்ட்.
என்றும் அன்புடன்
kattupaya s

.jpg)


கருத்துகள்
கருத்துரையிடுக