இரவின் பாதையில்
பிரியமுள்ள வாசகர்களே,
இந்த நாள் முடிய இன்னும் சில மணி நேரமே இருக்கிறது. தூக்கம் அவசியம். தூக்கமின்மை ஒரு வாதை . நானும் சில சமயங்களில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு இருக்கிறேன். நேரத்தோடு தூங்குங்கள் என்று எல்லோருமே அட்வைஸ் பண்ணுகிறார்கள்.ஆகவே நேரத்தோடு தூங்குவோம். சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். நம்மால் சில விஷயங்களை புரிந்து கொள்ள கூட இயலாமல் இருக்கலாம். இதையெல்லாம் பற்றி தூங்க போகும் நேரத்தில் நினைக்காமல் இருப்பது நல்லது. நான் மதியம் 1 மணி நேரம் தூங்குகிறேன். அது நிச்சயம் எனக்கு உதவுகிறது. குறுகிய கால உறக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. நிறைய பேர் அதை பற்றி எழுதி இருக்கிறார்கள். இன்று இரவு 11 மணிக்குத்தான் ஹரிதாவின் பகல் கனவுகள் 5 ம் பாகம் வெளியாகிறது. யார் விழித்திருந்து படிப்பார்கள்?. இரவில்தான் ஹரிதாவின் பகல் கனவுகள் பற்றி எழுத நேரம் கிடைத்தது. இந்த கனவுகள் பற்றி இன்னொரு நாள் விரிவாக பேசுவோம்,
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக