நிறம் மாறும் கதைகள் : அவற்றின் வியாபாரம்
பிரியமுள்ள வாசகர்களே ,
இன்றைய தினத்தில் கதையை காசாக்குவது என்பது மிகுந்த சிரமம் என்பது எல்லோரும் அறிந்ததே. கதை எங்கிருந்து தொடங்குகிறது எப்படி முடித்திட வேண்டும் முதற்கொண்டு ஃபார்முலாவோடு கதைகள் வெளியாக தொடங்கியிருக்கின்றன. ஒரு திறந்த வெளியை போல அவை எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கின்றன. இந்த ஃபார்முலா கதைகள் ரொம்ப ஆபத்தானவை அவை வந்த வேகத்தில் வசூலை குவிக்கும் பிறகு அப்படியே காணாமல் போய்விடும். சில இணையதளங்கள் இந்த பாணியை பின்பற்றுகின்றன. எதற்கு எடுத்தாலும் காசு என்கிற பாணியும் உண்டு. 5 எபிசோட் பிறகு கதை லாக் செய்யப்படும். இப்படியும் சம்பாதிக்க முடியுமா என்று நான் கனவிலும் யோசித்ததில்லை. சம்பாதியுங்கள் ஆனால் கதைகளின் ஆன்மாவை விற்று சம்பாதிக்காதீர்கள். இந்த நிறம் மாறும் கதைகள் சில சமயங்களில் கதை படிக்கும் ஆர்வத்தை நசுக்குகிறது. ஏன் இவர்களுக்கு பணம் கதை படிக்கும் முன்பே செலுத்த வேண்டும். சரி எழுத்தாளர்கள் சம்பாதித்து விட்டு போகட்டும். ஆனால் அந்த பணம் அவர்களிடத்து முறையாக போய் சேர்கிறதா ? அதுவும் இல்லை. இந்த வகையில் கதையின் தரத்துக்கும் காசுக்கும் சம்பந்தமில்லாமல் போகிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் மற்றபடி காசு வந்தால் போதும் என்கிற நிலைப்பாடு சரியா ? என்பதை உங்கள் பாரவைக்கே விட்டு விடுகிறேன். கதையின் கோணல்களுக்கு விளம்பரம் வேறு செய்யப்படுகிறது. தங்கையின் படுக்கையறைக்குள் நுழையும் கணவன் என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. நீங்கள் ஒன்றுமே செய்யாவிட்டாலும் நாவல்களும், கதைகளும் சாகாது. இருக்கிற கொஞ்ச நஞ்ச மாண்பையும் கெடுக்கிற கதைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிற தைரியம் யார் கொடுத்தது. அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் என்றாலும் பணத்தை மூலமாக வைத்து எழுதப்படும் எந்த இலக்கியமும் உருப்படாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். அத்தகைய பச்சோந்திகள் வீழ்ச்சிக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக