இரவு மழை
பிரியமுள்ள வாசகர்களே ,
இரவு மழை என்றே சொல்லே சற்றே பயத்தை ஏற்படுத்தலாம். நாம் ஜாக்கிரதையாக இருக்கத்தான் வேண்டும். இந்த மழையை தனிமையின் பேரோசையாக நாம் கருதலாம். மழையில் சிறுவர்கள் விளையாடுவது, குடையின்றி பயணிப்பது போன்றவை அத்தனை நல்லதல்ல. நாம் செய்ய வேண்டியது மழையின் பாதையில் குறுக்கிடாமல் இருப்பதுதான். நாம் முன்னேற்பாடுகளில் தீவிரமாக இருக்க வேண்டிய நேரம் இது. நான் இரவு மழை சில பலவீனமான வீடுகளை தாக்குவதை குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். நாம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். எல்லோருமே சில வருடங்களாவது அத்தகைய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள்தான். இந்த நேரத்தில் உதவி செய்ய தயாராய் இருக்க வேண்டும் என்று வாய் வார்த்தையால் நான் சொல்ல வரவில்லை. என்னால் முடிந்த உதவியை நிச்சயம் நான் செய்வேன். மழை பற்றிய செய்திகள் பரவலாக வரும்போதே நமது பயணத் திட்டங்களை அதை ஒட்டி அமைத்து கொள்ள வேண்டும். நம்மை மீறி என்ன நடக்கும் என சிலர் பால் வாங்க போகிறேன் என்று புயலில் போகிறவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மழை குறித்து பேசும்போது இந்த பவர் கட் நிச்சயம் ஏற்படும். நாம் அதற்கு தயாராய் இருக்க வேண்டும். டீ , பஜ்ஜி , இளையராஜா என்று யாராவது ரீல்ஸ் போட்டால் நிச்சயம் தடுத்து நிறுத்த வேண்டும்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக