கதைகள் சொல்ல வருவது என்ன ?
பிரியமுள்ள வாசகர்களே,
பொதுவாக ஒரு கதை என்றால் ஆரம்பம் மற்றும் முடிவு இடையே ஏற்படும் சிக்கல்கள் இவ்வாறு இருக்கும். கதையை படித்தவுடன் அது பற்றிய சிந்தனை நமக்குள் உதிக்கும். அதே சமயம் எல்லா கதைகளும் நமக்குள் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை . பெரும்பாலும் எழுத்தாளர் யார் என்பதிலேயே நமது கவனம் இருக்கும். இந்த கதைகள் சொல்ல வருவதெல்லாம் வெறும் கால குறிப்புகள் என்று தோன்றலாம். உண்மையான கதைகள் காலத்துக்கும் சொல்ல வருவது மனிதனை பற்றியும் அவனது உருமாற்றம் பற்றியும். ஒவ்வொரு காலகட்டத்தையும் கதைகள் பதிவு செய்கின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சூழ்நிலையை அனுசரித்தே கதைகள் எழுதப்படுகின்றன. இந்த கதைகள் சில சமயம் அதீத புகழ் பெறுகின்றன . சினிமாவாக கூட எடுக்கப்படும் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சொல்ல நான் சொல்லவருவது இந்த கதைகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. டிவி சீரியல் கதைகள் பற்றி எனக்கு அவ்வளவு உயர்வான அபிப்ராயம் கிடையாது. சில கதைகள் மனித வாழ்வையே திசை மாற்ற கூடியவை. அத்தகைய கதை எழுதுபவர்கள், கதை சொல்லிகள் காலம் கடந்தும் நிற்கிறார்கள். இந்த கதைகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறுபவை அல்ல. சிலர் காதல் கதைகளில் பிரசித்தமாக இருக்கிறார்கள். சிலர் திரில்லர் நாவல் படிக்க ஆர்வமாய் இருக்கின்றனர். ஆனால் எழுத்தின் மூலம் கற்பனை தான். கதைகள் நம் தனிமையை போக்குகின்றன. சொல்லாத விஷயங்களை சொல்லும் கதைகள் இன்னும் ஒரு படி மேலே போய் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுகின்றன. கதைக்கு உத்தி அதாவது மெதட் ஒன்று உண்டு. அது சரியானதாக இருக்க வேண்டும் அப்போதுதான் அதன் வடிவம் வெற்றி பெரும். கதைகள் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. நாம் சரியானவற்றோடு நம் இணைப்பை பலப்படுத்தி கொள்ள தொடர்ந்து வாசிக்க வேண்டும். கதைகள் சொல்லும் சேதியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக