வைரமுத்துவும் ஞானபீட விருதும்

 பிரியமுள்ள வாசகர்களே ,


                                          வைரமுத்து அவர்களுக்கு 2025 ம் ஆண்டுக்கான 60 வது ஞானபீட விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு அதை அவர் ஜூலை 13 ம் தேதி 2026 ம் ஆண்டு  பெற்றுக்கொண்டு விட்டார்.பெண்களை இழிவு படுத்திய வகையில் நடந்து கொண்ட வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்க எதிர்ப்பு வலுத்தது . வைரமுத்து யார் அடிப்படையில் ஒரு கவிஞர். ஆனால் தமிழ் இலக்கியத்துக்கும் அவர் பங்களிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? அவர் எழுதிய பாடல்களுக்கு அவர் தேசிய விருது நிறைய பெற்றுவிட்டார். இலக்கிய பங்களிப்பு செய்த ஜெயகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதே ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது அப்பட்டமான தவறு மட்டுமல்ல தவறான முன்னுதாரணம் கூட. 11 லட்ச ரூபாய் பரிசுப்பணம் . கவிதைகளுக்காக கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். நவீனத்துவத்தின் தொடக்கத்தின் பாதிப்புகளில் வைரமுத்து பெயர் எங்கும் இல்லாத போது இந்த விருது அர்த்தமற்றது. #me too  இயக்கம் வைரமுத்துவுக்கு எதிராக  தொடர்ந்து குரல் கொடுத்து வருகையில் அவர்கள் போராட்டமும்,குரலும் அர்த்தமற்றதாகவே கருதப்படும் சூழ்நிலை நம் நாட்டின் அவல  நகைச்சுவையாகத்தான் எனக்கு படுகிறது,


என்றும் அன்புடன் 

kattupaya s


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்