கடற்கரைக்கு பக்கத்தில் வீடு வாங்கும் கனவு
பிரியமுள்ள வாசகர்களே,
கடல் அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதன் அருகே வீடு வாங்க வேண்டும் அங்கிருந்து கடலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது பேராசை.ஆனால் கடல் என்னை இழுக்கிறது. நீச்சல் தெரிந்த, தெரியாத எல்லோரையும் அது தன் வசப்படுத்துகிறது. குழந்தைகள், குமரிகள் , பெரியவர்கள் என எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பதிலுக்கு நாம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இன்ன பிற குப்பைகளையும் கடலில் கொண்டு சேர்க்கிறோம். சுனாமி வந்த பிறகு கடலின் வீரியம் கூடிவிட்டது. அதன் எல்லைகள் விரிவடைந்து கொண்டு போகின்றன. வீடு வாங்குவதே கஷ்டம். இதில் கடல் அருகே வீடு என்றால் லோன் தொகை பெரிதாகத்தான் தேவைப்படும். மறக்க முடியாத அலைகள் அவை பற்றி நாவலில் எழுதுவதோடு சரி. அவற்றின் வேகம் கணிக்க முடியாதது. கடல் உள் வாங்குவதாய் சில இடங்களில் கேள்விப்படுகிறோம். வீடு வாங்கும் கனவு இன்னும் பலருக்கு உள்ளது. உருவம் படத்தில் பீச் பக்கத்தில்தான் வீடு வாங்கியிருப்பார் கதாநாயகன் மோகன். அந்த வீடு பூர்வீக சொத்தாக அவருக்கு அமையும். அப்புறம் பில்லி சூனியம் என்று கதை நீளும். மோகன் பேயாவார். பயப்படாதீர்கள் இரவு பீச் அற்புதமாக இருக்கும். அதிகாலை , மாலை ஜாகிங் செய்ய வசதி. டீ குடித்தால் கூட ஜன்னல் வழி கடலின் தரிசனம். குளிர் காற்று அது உப்புக்காற்றாக இருந்தாலும் சிறப்பு. என்னுடைய கனவுகள் பாதியில் அறுந்து விடுகின்றன. ஒரு கோர்வையாக அதைப்பற்றி எந்த நினைவும் வருவதில்லை. நீந்ததுதல் இல்லாமல் கடலை உள்வாங்க முடியாது. எனக்கு நீச்சல் தெரியாது. கடலின் ரகசியங்கள் யாருக்கும் தெரியவில்லை. எட்டி நின்று பார்க்கவே அதன் அலைகளில் கால் நனைக்கவே எல்லோருக்கும் விருப்பம். கடலின் எல்லைகள் நமக்கு புரியாது. நாம் தொடர்ந்து கடலை நேசிப்போம். மீண்டும் மீண்டும் அதன் அலைகளில் வீழ்வோம். நான் வீடு வாங்க நேர்ந்தால் எல்லோரையும் நிச்சயம் கடல் வெளியை சுற்றி பார்க்க அழைத்து போகிறேன்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக