கனவுகளின் வீழ்ச்சி
வணக்கம் நண்பர்களே ,
தூக்கத்தில் கனவு வருவது இயல்புதான். அதில் வரும் சில கனவுகள் நிஜத்தை ஒட்டி வருவதும் உண்மைதான். நம்மால் முடியாத அல்லது நடக்கவே நடக்காத ஆசைகள்தான் கனவாக வரும் என்று சிலர் சொல்லுகிறார்கள். என்னை பொறுத்தவரை கனவுகள் நம் ஆழ்மனதின் கண்ணாடி.நாம் என்ன மறைத்து வைத்தாலும் அது கனவின் வழி வெளிப்படும் என்று நம்புகிறேன். இப்போதெல்லாம் தூங்குகிற நேரமே குறைவாக இருப்பதால் கனவுகள் அரிதாகத்தான் நினைவில் வருகின்றன. ஒரு நாள் என் பழைய கால்சட்டை ஒன்றில் பணம் இருப்பதாய் கனவு கண்டேன். உண்மையில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. கனவுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். சில சமயங்களில் அது ஒரு சொல்லாத குறிப்புகளின் தொகுப்பாக இருக்கலாம். யாரும் கனவுகள் பற்றி வெளிப்படையாக சொல்வதில்லை. அது ஒரு மங்கலான நினைவு மட்டுமே. நான் சொல்ல வந்தது கனவுகளின் கோர்வையும் என்னை விட்டு விலகிக் கொண்டிருப்பதாக தோற்றம். நான் திடுக்கிட்டு விழிக்கிறேன் அதன் பிறகு தூக்கம் சுத்தமாக இல்லை. மணி காலை 2 அல்லது மூன்று காட்டுகிறது. பலருக்கும் இது நேரந்திருக்கலாம். சில சமயம் இந்த கனவுகள் எப்படி தோன்றுகின்றன என்பதே வியப்பாக இருக்கும். பாம்பு கனவுகள், யானை கனவுகள், நான் தொலைந்து போய் திரும்ப கிடைப்பதான கனவுகள் எல்லாம் இப்போது வருவதில்லை. நிஜத்தில் நான் என்னுடைய படுக்கையறையை அத்தனை எளிமையாகத்தான் வைத்திருக்கிறேன். நான் நல்ல இஞ்சீனியர் 40000 சம்பளம் என்று கூட கனவு கண்டேன். எல்லாவற்றையும் இழந்த பின்பு இந்த கனவுகளே துணையாய் இருந்தன, அவையும் இப்போது என் தொலைந்த தூக்கத்தின் பின்னே போய்விட்டன, இரவு வணக்கம் ..
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக