மகிழ்வுறு மயக்கத்திலே
பிரியமுள்ள வாசகர்களே,
நாம் பண்டிகை கொண்டாடுகிறோம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் உண்மையில் சந்தோஷம் நிரந்தரமாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை. இப்போது இது பட்டிமன்றம் நடத்தி சிரிப்பு ஏற்படுத்த சாலமன் பாப்பையா கூட இல்லை. நான் சொல்ல வருவது எது நிரந்தர சந்தோஷம் 80'ஸ் கிட்ஸ் அனுபவித்ததா அல்லது 90'ஸ்க கிட்ஸ் அனுபவித்ததா என்பதல்ல, உண்மையான சந்தோஷம் தேவைக்கு வேண்டியதை வைத்து அனுபவித்து வாழ்வதே. இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் நடைமுறை படுத்துவது கஷ்டம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியையே மாற்றிவிட்டார்கள். ஆனால் கஷ்டம் தீர்ந்ததா என்றால் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். தன் தேவைகளை பெருக்கிக்கொண்டே போனால் அடிப்படை தேவைகளுக்கு கூட திண்டாட வேண்டிதான் வரும். சிக்கனத்தை பற்றி பெரியார் சொல்லியிருக்கிறார். நமக்கு எது தேவையோ எது நமது பட்ஜெட்டுக்கு ஒத்து வருமோ அதற்குள் வாழ பழகி கொள்ள அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இஎம்ஐ, லோன் என்று இளம் தலைமுறையினரும் அழைக்கழிப்புக்கு உள்ளாவதை நாம் பார்க்கிறோம் . சிக்கனமாய் வாழ்வோம். வீண் ஆடம்பரத்தை தவிர்ப்போம் இந்த மகிழ்வுறு மயக்கத்திலே
என்றும அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக