டீயும் நானும்
பிரியமுள்ள வாசகர்களே ,
காலையில் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. என்னவோ நரி முகத்தில் விழித்தால் நல்லது என்று சொல்பவர்களை விட டீ சொம்புடன் யாராவது தென்பட்டால் அதிர்ஷ்டம் என்று கருதுபவன் நான். டீயின் பரிணாம வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும். 2 ரூபாய்க்கு விற்ற டீ இன்று 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. டீ ஒரு துணை, டீ ஒரு ஆதர்சம். காலையில் ஒரு டீ , 11 மணிக்கு இஞ்சி டீ, மாலை நண்பர்களுடன் ஒரு டீ. வீட்டில் ஒரு டீ என தொடரும் டீயின் ராஜாங்கம். டீக்கடை பேப்பர் , பாட்டு எல்லாம் இப்போதும் பிரியத்துக்கு உள்ளவையே. அன்பு நிறைந்த டீ என்று ஒன்று இருந்தது,எந்த விருந்தாளி வீட்டுக்கு வந்தாலும் முதலில் டீ சொம்பு ரெடி ஆகும். நாங்கள் பால் வாங்குவதை குறைத்துக்கொள்ளத்தான் டீ வாங்குகிறோம் என்று சொல்வோரும் உண்டு. டீ பல விதம். ஸ்ட்ராங்க் டீ, லைட் டீ, மீடியம் டீ, சுகர் ஜாஸ்தி, சீனி தூக்கலா ..இப்படி பல ரகம் உண்டு. காபியை வெறுப்பவன் அல்ல நான். டீ யை நிஜமாக நேசிக்கிறவன். டீக்கு துரோகம் செய்ய மனம் வருவதில்லை. நண்பர்கள் வாங்கி தருகிற டீ என்ற ஒன்று உண்டு அதன் பின்னால் பல கதைகள் சொல்லப்படும். யாராவது டீ வாங்கி தர மாட்டார்களா என்று ஏங்கிய வேலையில்லாத நாட்களும் நிறைய இருக்கிறது. டீ வேறு நான் வேறு என்று பிரித்து பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன் .
என்றும் அன்புடன்
kattupaya s
.jpg)


கருத்துகள்
கருத்துரையிடுக