ஹரிதாவின் பகல் கனவுகள் சில குறிப்புகள்
பிரியமுள்ள வாசகர்களே,
ஹரிதாவின் பகல் கனவுகள் நாவல் 16 பாகங்கள் Matrubharti யில் வெளியாகியுள்ளது. நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நாவல் சொல்ல வரும் விஷயம் என்னவென்று இதுவரை எந்த ஒரு தெளிவும் இல்லாமல் இருக்கலாம் அது அந்த ஹரிதா என்கிற பெண்ணின் நிலைப்பாடுதான். நாம் சில சமயங்களில் முடிவெடுக்க ரொம்பவே தடுமாறுவோம். அடுத்தடுத்த சம்பவங்களால் நாம் திக்கு முக்காடி போவோம். ஆனால் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும் அது காலத்துக்கும் நிலைத்து இருக்கும். ஹரிதா சமரை விரும்பினாளா இல்லையா என்பதில் அவளுக்கு குழப்பம் ஆனால் காதலை தாண்டியும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். நாம் தேடாமலே சில விஷயங்கள் நமக்கு கிடைக்கும் அவை நல்லவையா கெட்டவையா என நமக்கு புரியாத வயதில் நண்பர்களே நமக்கு வழி காட்டுகிறார்கள். ஆண் பெண் நட்பு இன்றும் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமல்தான் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது குறித்து சிந்திக்க வேண்டும். மாற்றங்கள் அவள் மனதில் ஏற்படுகின்றன. கீர்த்தி அவளுக்கு வழி காட்டுகிறாள். காலத்துக்கும் காதலையே கட்டிக்கொண்டு அழ முடியாதல்லவா ? நாம் நிறைய படிக்க வேண்டும் அதனை யோசித்து பார்க்க வேண்டும். ஹரிதா அதைத்தான் விரும்பினாள். புத்தக வழி யோசிப்பு அதன் விளைவுகள் தீவிரம் போன்றவை அவளை பாதிக்கின்றன. கல்யாணத்தில் கீர்த்திக்கு நம்பிக்கை இல்லை ஆனால் நட்பில் இருக்கிறது. நல்ல நட்பில் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையாக சொல்லலாம். ஹரிதா பாலியல் பற்றி சிந்திக்கிறாள். அவளுக்கு காமம் ஒரு ஆப்ஜெக்ட் அதுவே முக்கியம் அல்ல. எல்லா கோணங்களிலும் தன்னுடைய பருவத்தை இணைத்து பார்க்கும் ஹரிதா தன் ஸ்கூல், காலேஜ் நாட்களை பொக்கிஷம் போல பாதுகாக்கிறாள். நண்பர்களை மதிக்கிறாள். தன்னுடைய தேவைகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி அவளது சிந்தனை தொடர்கிறது. சில சமயம் ஆறுதல் தேடி அவள் அலைவதில்லை. அழக்கூடிய நிலை வந்த போதும் அழ அவள் விரும்பவில்லை. நாம் ஹரிதாவை முன் மாதிரியாக உருவாக்கவில்லை. இந்த சமுதாயத்தின் ஒரு அங்கமாகத்தான் ஹரிதா கருதப்பட வேண்டும். அவளுக்கும் ஆசைகள் உண்டு. மீள் பார்வையில் இன்னும் நிறைய விஷயங்களை நான் உணர்ந்தது போல நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து படியுங்கள்.
என்றும் அன்புடன்
kattupaya s

கருத்துகள்
கருத்துரையிடுக