எழுத்தும் அதன் கட்டுமானங்களும்
பிரியமுள்ள வாசகர்களே ,
எல்லோருக்குமே எழுதுகிற ஆசை இருக்கும். நாம் விரும்புகிற ஒன்றை அல்லது நம்மை பாதித்த விஷயத்தை சொல்ல நினைப்போம். மேலும் அதை எப்படி சொல்வது என்ற தயக்கத்திலேயே சிலர் நின்று விடுவதும் உண்டு. எழுத்துக்கு தக்க பின்புலம் வேண்டும் என்பது இல்லை. அந்த எழுத்து உண்மைக்கு அருகில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நாம் எழுதுவது 100 சதவீதம் உண்மையாய் இருக்க வேண்டியதில்லை ஆனால் எழுதுகிற நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்க வேண்டும். சில பேர் எழுதி தள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் அனுபவம் அவர்களுக்கு துணையாய் இருக்கலாம். ஜெயகாந்தன் போன்றோர் எழுதியதெல்லாம் தன் மீள் பரிசோதனை என்றே கருதலாம். ஒரு கருத்தை வெவ்வேறு கோணங்களில் அலசி பார்ப்பதும் நல்லதே. அப்படித்தான் ஜெயமோகன் எழுதுகிறார். கடந்த காலங்களை பிழிந்து அவற்றில் இருந்து கதை பண்ணுகிறார். நிகழ் காலம் ஒரு சூட்சும வலை போல அவர் கதைகளில் தெரிகிறது. எதிர்காலம் குறித்து கனத்த கேள்விகள் எழுப்புகிறார். தோன்றுவதெல்லாம் எழுதினால் வெறுமையே மிஞ்சும். என்ன எழுத நினைக்கிறோமோ அதன் உள் வெளி புற வெளி தெரிந்து எழுதுவது நல்லது.எப்போதுமே நமக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுப்பதை விட எது அவசியமோ அல்லது எதை சொன்னால் அந்த களத்தின் தீவிரத் தன்மை விளங்குமோ அதை சொன்னால் நல்லது. சினிமா கதைகள் எதற்கும் அடங்குபவை அல்ல. நான் சொல்வது எழுத்தை பின்பற்றுபவர்களுக்கான ஒரு எளிய அறிமுகம். நீண்ட தூர பிரயாணங்களில் ஒரு இடைவெளி எடுத்துக்கொள்வது போல கூட எழுதலாம்.நம்முடைய ரீல்ஸ் தலைமுறை இதையெல்லாம் படிப்பார்களா என தெரியாத நிலையில் நாம் எழுதுவது தெளிவாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக