சிறுகதைகள் : ஒரு பார்வை
பிரியமுள்ள வாசகர்களே ,
சிறுகதைகள் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. சிறுகதைகள் அதன் தோற்றத்தை இழந்து விட்டதை போல தோன்றினாலும் அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது. சில எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்த பத்திரிக்கையின் நினைவாகவே இருந்திருக்கிறது. தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம், போன்றவை சிறுகதைகளின் ஏகோபித்த இடமாக இருந்து வந்தது. தொடர்கதைகள் போல நாம் அதன் வரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. உடனடி விளைவும் சிறுகதையால் ஏற்பட்டது . சிறுகதைகளை படிப்பதில் மக்கள் இன்னமும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதன் தோற்றம் வேண்டுமானால் மங்கி இருக்கலாம். ஆனால் அதன் வீரியம் குறையவில்லை. நாம் தொடர்ந்து அதன் தரத்தை அதிகரிக்க செய்ய எழுத வேண்டும். சிறுகதைகளின் வடிவ மாறுதலை ஆனந்த விகடன், குமுதம், போன்றவை செய்தன. ஆனால் தரத்தை குறைத்து கொண்டன. அதன் விளைவாக அதன் மேல் ஆர்வம் குறையத்தொடங்கியது. ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என எல்லோருக்குமே தெரியும். அதனை சிதற அடித்தவர் சுஜாதா. அவர் எழுதிய பாணியில் பல எழுத்தாளர்களும் எழுத துவங்கினர். ஆனால் அவர் அளவுக்கு புகழ் பெற முடியவில்லை. தினமணி கதிரில் நல்ல சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன. தீராநதி, உயிர்மை போன்றவற்றிலும் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முற்போக்கு சிறுகதைகள், எளிமையான சிறுகதைகள் சற்றே பெரிய சிறுகதைகள் என பலவகைப்பட்டது. ஆதவன் சிறுகதைகள் எல்லோருக்கும் பிடித்தமானவை. மாடர்ன் சொசைட்டி பற்றி அக்கு வேறு ஆணி வேறாக இயல்பான நகைச்சுவையில் எழுதியவர். அவருடன் இன்னும் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சிறுகதையை பற்றிய மேம்போக்கான பார்வை மாற வேண்டும். பிரதிலிபி சிறுகதையை முற்றிலுமாக ஒழித்து விட்டது. இந்த போக்கை நாம் மாற்றியாக வேண்டும். உயிர்ப்புள்ள சிறுகதைகளை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அதை எழுதவும் செய்ய வேண்டும். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பாவண்ணன்,பூமணி, சோ தர்மன் , வண்ணநிலவன்,ஜெயமோகன் போன்றோர் எளிய சிறுகதை அமைப்பு கொண்டு எல்லாரையும் ஈர்த்தவர்கள். இன்றைய தினம் பல வகை எழுத்துகளின் வடிவம் சொல்லப்படுகிறது. நாவல் அதன் சவுகரியம் காரணமாக சிறுகதைகளின் இடம் தற்காலிகமாக குறைந்து இருக்கிறது. மீண்டு வர வேண்டும் சிறுகதைகளின் காலம்.
என்றும் அன்புடன்
kattupaya s
.jpg)
.jpg)
.jpg)


கருத்துகள்
கருத்துரையிடுக