Good morning
காலை வணக்கம். நாம்,நம்மை சுற்றி நிகழும் சம்பவங்கள் எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டிருப்பார் என்று நம்புகிறோம். அதே சமயம் அவற்றை கண்டும் காணாமலும் இருக்கிறோம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். சக மனிதன் மேல் இரக்கம் காட்ட கடவுள் தான் வரவேண்டும் என்பதில்லை. நாம் உதவி செய்வோம். அதற்காக கடவுளை மறுத்து பேச நான் வரவில்லை. எல்லா பாரத்தையும் இறைவன் மேல் போட்டுவிட்டு சிலர் வாழ்கின்றனர். அவர்களையும் குறை சொல்லி பலன் இல்லை. நாம் நினைப்பது நல்லதாக இருந்தால் நல்லதே நடக்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் மேலும் சுயலாபத்துக்காக இயங்குபவர்கள் கடவுள் பெயரை சொல்லி சுரண்டுவதுதான் கொடுமை. இன்றைய நாளில் எல்லாம் நல்ல விதமாய் நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக