Malgudi days(a willing slave)





 

பிரியமுள்ள வாசகர்களே ,

ஆர் கே நாராயண் புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் அதை என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. ஆனால் ஷங்கர் நாக் இயக்கிய அந்த தொடர்கள் இன்னும் பலரால் பாராட்டப்படுகின்றன, அதில் ஒரு கதைதான் a willing slave. இந்த கதை ஆயா எனப்படும் தாயம்மா பற்றியது. இந்த கதையில் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண்மணியான ஆயாவின் அரவணைப்போடு வளரும் குழந்தைகள், வீடு பற்றிய அவளது விசுவாசம் போன்றவற்றை சொல்லும் ஆர் கே நாராயண் . இறுதியாக சிலோனுக்கு வேலைக்கு போன கணவன் திரும்ப வரும் போது அந்த வீட்டு வேலையை விட்டு செல்லும் காட்சியை சொல்லுகிறார், அந்த குழந்தைக்கும் ஆயாவுக்கும் இருக்கும் நெருக்கமான உறவை சொல்லும் போது அந்த கணவன் பற்றிய குறிப்பை சொல்லுகிறார். தியாகம், அன்பு எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் கதையில் இறுதியில் அந்த கூண்டை அடைத்து விட்டு கணவனை பின்தொடர்ந்து போவார். எல்லா பெண்களின் நிலையும் இதுதான். காணொளி இணைப்பு  youtube மூலம் வெளியாகி  உள்ளது. இந்த கதைக்கு மொழி ஒரு பொருட்டே அல்ல, ஆர் கே நாராயண் உலக புகழ் பெற்ற  எழுத்தாளர். 


என்றும் அன்புடன் 

kattupaya s

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்