காத்திருத்தலின் இயல்பு மயக்கம் (Neelathamara 2009)

பிரியமுள்ள வாசகர்களே, 

Neelathamara  மலையாள திரைப்படம் MT வாசுதேவன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. இதன் முதல் பதிப்பு திரைப்படமாக 1979ம் ஆண்டு Yusufali Kechery அவர்கள் இயக்கத்தில்  வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு 2009 ஆம் ஆண்டு லால் ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்தது . அர்ச்சனா கவி நடித்திருந்தார் என்பதை விட அந்த பாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. கதை சுருக்கம் இந்த விக்கிபீடியா லிங்க் மூலம் அறியலாம் . Neelathamara ஒரு வீட்டு வேலைப்பெண்ணாக அறிமுகமாகும் கதாநாயகி வீட்டு பாட்டியின் பேரனோடு காதல் கொள்கிறாள். அவனோ இவளை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணோடு திருமணம் செய்து கொள்கிறான். புது மணப்பெண் வீட்டுக்கு வரும்போது தன்னுடைய கணவன் அந்த வீட்டு வேலைக்காரப்பெண்ணை ஏமாற்றியதை அறிந்து கொள்கிறாள். அந்த வேலைக்கார பெண் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அங்கிருந்து அவளை அண்ணன் அழைத்து செல்லும்போது  கூட செல்கிறாள். இது ஒரு பெண்ணின் பரிமாணங்களை சொல்லும் படமாகும் . இரண்டு பகுதி திரைப்படங்களும் வெற்றி பெற்றவை. படத்துக்கு இசை வித்யாசாகர். ஷ்ரேயா கோஷல் பாடிய அனுராக விலோச்சனனாயி(Anuraga Vilochananayi) எனத்தொடங்கும் பாடல் பிரபலமானது. 

என்றும் அன்புடன் 

kattupaya s


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்