வெளிகளில் பரவும் சமூக கிண்டல் (troll )
பிரியமுள்ள வாசகர்களே,
முன்னொரு காலத்தில் ஆனந்த விகடன்,குங்குமம், குமுதம் போன்ற இதழ்களில் வெளிவந்த நகைச்சுவை துணுக்குகள்,வேலைக்காரி ஜோக்குகள், கிண்டலான ஹோட்டல் சர்வர் ஜோக்குகள், என எல்லாம் கடந்து இப்போது troll ஆக யாரையுமே எளிதில் பகடி செய்யும் அளவுக்கு வந்துவிட்டன. இவை ஒரு வகையில் எல்லை மீறாத வரை நல்லதுதான் எனினும் தனி நபர் தாக்குதலுக்கு இவை இப்போது மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோரும் சிரித்து விட்டு கடக்கிற அளவுக்கு நேரம் குறைவாக இருப்பதால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் body shaming (the act of subjecting someone (or yourself) to humiliation, judgment, or criticism regarding their physical appearance, body shape, or size. ) தற்போது அதிக அளவில் நடக்கிறது. அது வேகமான செய்தியாக பரவவும் செய்கிறது. நாம் இதனை தடுக்க முடியாவிட்டாலும் அதன் போக்கு பெரிய அளவில் மூன்றாம் பாலினத்தவர், பெண்கள் போன்றோரை பாதிக்கிறது. எனக்கு பள்ளி நாட்களில் என்னை கிண்டல் செய்தவர்கள் ஞாபகம் வருகிறது. விளையாட்டாக நான் பல பேருக்கு பட்ட பெயர் சூட்டி அழைத்திருக்கிறேன். அதன் விளைவுகள் இன்றும் என்னை வருத்தமடைய செய்கின்றது. முடிந்தவரை இதை தவிர்ப்போம் . அத்தகைய troll போஸ்ட்களை பகிர்வதை தவிர்ப்போம்.
என்றும் அன்புடன்
kattupaya s


கருத்துகள்
கருத்துரையிடுக